திண்டுக்கல் : திண்டுக்கல் நிலக்கோட்டை அருகே உள்ள சிறுநாயக்கன்பட்டி பகுதியை சோ்ந்த (17), வயது சிறுவன் ஒருவன், அங்குள்ள தென்னந்தோப்புக்குள், வைத்து கஞ்சா விற்பதாக விளாம்பட்டி காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் காவல் உதவி ஆய்வாளர் திரு. மயில்ராஜ், தலைமையிலான காவல் துறையினர் , அங்கு விரைந்தனர். பின்னர் கஞ்சா விற்று கொண்டிருந்த சிறுவனை மடக்கி பிடித்தனர். அவனிடம் இருந்து ½ கிலோ கஞ்சா பறிமுதல், செய்யப்பட்டது. மேலும் இதுதொடர்பாக காவல் துறையினர் , வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா