மதுரை: அவனியாபுரத்தில்எட்டேமுக்கால் கிலோ கஞ்சாவுடன் 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவனியாபுரம் சப் இன்ஸ்பெக்டர் அருண் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அவர் வைக்கம் பெரியார் நகர் ரோடு ரிங் ரோடு சந்திப்பில் சென்றபோது சந்தேகப்படும்படியாக பதுங்கிய ஆறு பேரை பிடித்து சோதனை செய்தார். சோதனையில் அவர்கள் எட்டே முக்கால் கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவற்றை பறிமுதல் செய்து அவர்களிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில் வில்லாபுரம் அருப்புக்கோட்டை மெயின் ரோட்டை சேர்ந்த சுதர்சன் மகன் நிதின் 22, கிருஷ்ணகிரி சத்யசாய் நகரைச் சேர்ந்த வேணுகோபால் மகன் விக்னேஷ் 26, ராமநாதபுரத்தை சேர்ந்த செல்வகுமார் மகன் விக்னேஷ் கிருஷ்ணன்23, கும்பகோணம் ஸ்ரீநகர் காலனியைச் சேர்ந்த அன்வர் பாஷா மகன் சுகைன்கல்பான்23, ராமநாதபுரம் காட்டு பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த தேவராஜன் மகன் மணிகண்டன், 26என்று தெரியவந்தது. அவர்கள் ஆறுபேரையும் கைது செய்தார்.