திண்டுக்கல் : திண்டுக்கல் வேடசந்தூர் அருகே நாயக்கனூரில், கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக, திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி.யின் தனிப்படை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் காவல்துறையினர் , அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்தின் அடிப்படையில், அதே பகுதியை சேர்ந்த இளங்கோ (40), என்பவரது வீட்டில் காவல்துறையினர் , சோதனை நடத்தினர். ஆனால் வீட்டில் கஞ்சா எதுவும் சிக்கவில்லை.
இதையடுத்து இளங்கோவிடம் காவல்துறையினர் , விசாரித்ததில், அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகம் அடைந்தகாவல்துறையினர் , வீட்டின் அருகே இருந்த முட்புதரில் சோதனை செய்தபோது, அங்கு 7½ கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இளங்கோவையும், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவையும் எரியோடு காவல் நிலையத்தில், தனிப்படையினர் ஒப்படைத்தனர். இதையடுத்து எரியோடு காவல்துறையினர் , வழக்குப்பதிந்து, இளங்கோவை கைது செய்தனர்.