ஈரோடு : பெருந்துறை பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதி பணிக்கம்பாளையம். இந்த பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், அதற்காக வடமாநிலத்தை சேர்ந்த 2 பேர் அங்கு வந்து உள்ளதாகவும் பெருந்துறை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. கஞ்சா கலந்த சாக்லெட்டுகள் தகவல் கிடைத்ததும் பெருந்துறை காவல் ஆய்வாளர் திரு. மசூதாபேகம், உதவி காவல் ஆய்வாளர் திரு. செந்தில்குமார், மற்றும் காவல்துறையினர் , பணிக்கம்பாளையம் பகுதிக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு 2 பேர் சந்தேகப்படும் வகையில், பையுடன் நின்று கொண்டிருந்தனர். உடனே அவர்கள் 2 பேரிடம் இருந்த பையை வாங்கி காவல்துறையினர் , சோதனையிட்டனர். சோதனையின்போது அந்த பையில் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் கஞ்சா கலந்த 30 சாக்லெட்டுகள் இருந்ததை கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து 2 பேரையும் பிடித்து காவல்துறையினர் , விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அவர்கள் மேற்கு வங்காள மாநிலம் பர்கானா மாவட்டம் கேட்டர்ஜாக் பகுதியை சேர்ந்த ராகுல் மண்டேல் (21), ஒடிசா மாநிலம் ஜெலஸ்பூர் பகுதியை சேர்ந்த சந்தோஸ்குமார் பெஹ்ரா (42), என்பதும், கஞ்சா கலந்த சாக்லெட்டுகளை கொண்டு வந்து பணிக்கம்பாளையத்தில், விற்க முயன்றதும்’ தெரிய வந்தது. காவல்துறையினர் மேலும் நடத்திய விசாரணையில், ‘சாதாரணமாக குட்கா போன்ற புகையிலை பொருட்களை பயன்படுத்துவோருக்கு சிறிது நேரம் ஓரளவு போதை மயக்கம் இருக்கும். ஆனால் அதற்கு பதிலாக கஞ்சா கலந்த சாக்லெட்டை வாயில் வைத்து சுவைத்தால் 12 மணி நேரத்துக்கும் மேலாக, அதை சுவைத்த நபருக்கு போதை இருக்கும்,’ என்ற திடுக்கிடும் தகவலும் கிடைத்தது. கைது இதைத்தொடர்ந்து ராகுல் மண்டேல் மற்றும் சந்தோஸ்குமார் பெஹ்ரா ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து புகையிலை பொருட்கள் மற்றும் கஞ்சா கலந்த சாக்லெட்டுகளையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து பெருந்துறை காவல் ஆய்வாளர் திரு. மசூதாபேகம் , கூறுைகயில், ‘வளர்ந்து வரும் இளைய தலைமுறை இளைஞர்களை குறி வைத்து, அவர்களை மீள முடியாத போதைக்கு அடிமையாக்கும் வகையில், தற்போது பெருந்துறை பகுதியில், கஞ்சா கலந்த போதை சாக்லெட்டுகள் புதிதாக விற்பனைக்கு வந்துள்ளன. இனி வரும் தலைமுறையினர் போதைக்கு அடிமையாகாமல் இருக்க வேண்டும் என நினைக்கும் ஒவ்வொரு பெற்றோரும், தங்களது மகன்களை மிகுந்த கண்காணிப்புடன் வளர்க்க முன் வரவேண்டும். அப்போது தான், இளைஞர்களின் எதிர்கால வாழ்க்கை அவர்களுக்கு நன்மை பயப்பதாக அமையும்,’ என்றார்.
ஈரோட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்கள் :