மதுரை : புதிய எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ள சிவபிரசாத் (32), ஏற்கனவே மதுரை நகர் சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக இருந்து உள்ளார்.
திரு. பாஸ்கரன், கடந்தாண்டு ஜூன் 9 பொறுப்பேற்றார். குற்றங்களையும், கஞ்சா விற்பனையையும் கட்டுப்படுத்த ஆர்வம் காட்டினார். மற்ற மாவட்டங்களுக்கு முன்னோடியாக கஞ்சா வியாபாரிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்தார். மதுரை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை இல்லாத நிலையில், திண்டுக்கல்லுக்கு மாற்றப்பட்டுள்ளார். திண்டுக்கல்லில் சில நாட்களாக தொடர் கொலைகள் நடந்தன. நேற்றுமுன்தினம் சட்டம் ஒழுங்கு குறித்து முதல்வர் திரு. ஸ்டாலின், தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், இதுகுறித்து விவாதிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் அம்மாவட்ட எஸ்.பி., திரு. சீனிவாசனுக்கு, பதில் பாஸ்கரனை நியமித்துள்ளனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி