சேலம்: தமிழக காவல்துறை சிறப்பாக செயல்படுவதாகவும் குற்றவாளிகளிடம் காவல்துறையினர் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டுமென ஓய்வு பெற்ற காவல் துறை இயக்குனர் அனுப்ஜெய்ஸ்வால் பேட்டி1986 ஆம் ஆண்டு பயிற்சி முடிந்த காவல் குடும்பத்தினருடன் சந்திப்பு கூட்டம் சேலத்தில் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக ஓய்வுபெற்ற காவல்துறை இயக்குனர் அனூப் ஜெய்ஸ்வால் கலந்து கொண்டார்காவல் குடும்பத்தினர் பாராட்டுகள் தெரிவித்து கௌரவித்தனர்இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறும்போது கடந்த 1986ஆம் ஆண்டு ஒன்பதாவது பெட்டாலியன் பயிற்சி முகாமின் முதல்வராக இருந்து பயிற்சி அளித்ததவும் மணிமுத்தாறு பயிற்சியில் ஆயிரம் பேர் பங்குபெற்றனர் ஆறு மாத பயிற்சி காலம் சிறப்பாக இருந்தது என்றும் 36 ஆண்டுகள் பணியில் இருந்த நான் தற்போது ஓய்வு பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார் .
நான் ஆசிரியராக ஆக வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம் எதிர்பாராதவிதமாக காவல்துறையில் பணியாற்ற நேர்ந்தது என்றும் கூறினார் பல்வேறு பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு அறிவியல் சார்ந்த தகவல்களை பயிற்சி அளித்து வருவதாகவும் இதுவரை 128 பள்ளிகளில் அறிவியல் சார்ந்த விஷயங்கள் பயிற்சி அளித்து உள்ளேன் எனவும் கடந்த 2 ஆண்டுகளாக கொரோணா பாதிப்பால் பயிற்சி அளிக்கவில்லை என்றும் தற்போது கொரோனா குறைந்து உள்ளதால் மீண்டும் மாணவ மாணவிகளுக்கு பயிற்சி அளித்து வருவதாக தெரிவித்தார்மேலும் அவர் கூறும்போது தமிழக காவல்துறை மிகவும் சிறப்பாக செயற்படுவதாகவும் காவல் துறையில் எந்த பொறுப்பில் இருந்தாலும் எந்த பதவியில் இருந்தாலும் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் குறிப்பாக குற்றவாளிகளிடம் அன்பு செலுத்த வேண்டும் என்பதே எனது கருத்தாக தெரிவித்தார்.