தென்காசி : தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணராஜ் IPS அவர்களின் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் அனைத்து காவல் நிலைய எல்கைகுட்பட்ட பகுதிகளில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. மோட்டார் வாகன விதிமுறைகளை பின்பற்றி ஆட்டோவில் அனுமதிக்கப்பட்ட அளவில் மட்டுமே பயணிகளை ஏற்ற வேண்டும், அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு ஒன்றும் அறியா பள்ளிக் குழந்தைகளை அதிக அளவில் ஆட்டோவில் ஏற்றி சென்று விபத்து ஏற்பட நாமே காரணமாக அமைந்து விடக்கூடாது என்றும் மோட்டார் வாகன விதிமுறைகளை முறையாக கடைபிடிக்காத ஆட்டோ ஓட்டுனர்களுக்கு மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்..