மதுரை : கொடைரோடு அருகே ராஜதானிகோட்டையை சேர்ந்தவர்கள் அன்பரசன் (26) ,மனோஜ் குமார் (26), டிராக்டர் ஓட்டுநர் ராஜ்குமார் (27), பெருமாள் (30). நால்வரும் மதுபோதையில், பகவதி அம்மன் கோயில் அருகே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். ராஜதானிகோட்டை விழாவின்போது அன்பரசன், மனோஜ்குமார் வைத்த டிஜிட்டல் பேனரை ராஜ்குமார், பெருமாள் கிழித்துள்ளனர். இதை மனதில் வைத்து வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த அன்பரசன், மனோஜ்குமார் இருவரும் ராஜ்குமாரை கத்தியால் கழுத்தை அறுத்ததில், இறந்தார். தலையில் காயமடைந்த பெருமாள் அம்மையநாயக்கனுார் ஆரம்ப சுகாதார நிலையத்தில், சேர்க்கப்பட்டார். அம்மையநாயக்கனுார் காவல் துறையினர், அன்பரசன் ,மனோஜ் குமார் இருவரையும் கைது செய்தனர். வெட்டியவர் கைதுதாண்டிக்குடி :பெரும்பாறையை சேர்ந்தவர் தங்கபாண்டி 28, அதே பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் 37,தனபாண்டி தாயாரிடம் பணம் வாங்கி தர மறுத்துள்ளார். இதை கேட்ட தன பாண்டியை ராமச்சந்திரன் அரிவாளால் தலையில் வெட்டினர். தாண்டிக்குடி காவல் துறையினர், கைது செய்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி