சேலம் : சேலம், அஸ்தம்பட்டி அருகே, கல்லாங்குத்து புதுாரை சேர்ந்தவர் மணிகண்டன், (31), இவர், சின்ன சீரகாபாடியில் உள்ள, தனியார் தாபா ஓட்டலில் பணிபுரிந்தார். இந்நிலையில், அங்கு மாயமான, 5 லட்சம் ரூபாயை கேட்டு, மணிகண்டனுக்கு, உரிமையாளர் பாலாஜி தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது. இதில் மனமுடைந்த அவர், தற்கொலை செய்து கொண்டார். அதற்கு முன், ‘வீடியோ’ ஒன்றை வெளியிட்டார். அதில், ‘நான் பணம் திருடவில்லை. ஆனால், 5 லட்சம் திருடியதாக ஏற்றக்கொள்ளும்படி தொந்தரவு கொடுத்தனர்’ என, தெரிவித்திருந்தார்.
இந்த வீடியோவை பார்த்த உறவினர்கள், தாபா ஓட்டல் உரிமையாளர், மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டத்தில், ஈடுபட்டனர். இதையடுத்து, மணிகண்டனை தற்கொலைக்கு துாண்டியதாக, ஓட்டல் உரிமையாளர் பாலாஜி, ஊழியர்கள் அசோக், சுரேஷ் மீது, அஸ்தம்பட்டி காவல் துறையினர் , வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்