கோவை: கோவை சத்திரோட்டில் உள்ளகோவில்பாளையத்தில் கிரீன்பீல்டு, கிரவுன்சிட்டி குடியிருப்பு உள்ளது. இங்கு 100க்கு மேற்பட்ட தனி வீடுகள்உள்ளன.. இதில் வசிப்பவர் சுஜாதா (வயது 59) இவரது மகன் டெல்லியில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.மருமகள் கர்ப்பிணியாக உள்ளார்.அவருக்கு பிரசவ உதவி செய்வதற்காக சுஜாதா தனது வீட்டை பூட்டிவிட்டு டெல்லி சென்றிருந்தார். இந்த நிலையில் அவரது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை அக்கம் பக்கம் உள்ள பார்த்து சுஜாதாவுக்கு தகவல் தெரிவித்தனர் .இது குறித்து தகவல் அறிந்த கோவில்பாளையம் போலீசார் அங்கு வந்து பார்த்த போது வீட்டில் இருந்த 2 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள் பணம் ரூ 10 ஆயிரம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதேபோல அதே பகுதியை சேர்ந்த சண்முகம் ,கார்த்திகேயன் ஆகியோர் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம ஆசாமிகள் கைவரிசைகாட்டியுள்ளனர்.
சண்முகம் மகன் கவுதம் புதுமாப்பிள்ளை. .இவருக்கு வருகிற 23-ஆம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. புது மாப்பிள்ளைக்கு வேண்டிய ஆடைகளை எடுத்து வைத்து இருந்தனர்.இந்த ஆடைகளை கொள்ளையர்கள் திருடி சென்றுள்ளனர்.இந்தத் தொடர் கொள்ளையால் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.இரவு ரோந்து பணியை அதிகரிக்குமாறும்,இந்த கொள்ளை வழக்கில் துப்புதுலக்கி குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யுமாறும் கோவில்பாளையம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சிவக்குமாரிடம் புகார் செய்துள்ளனர்.இதுதொடர்பாக அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் நேற்று மாலை ஒரு அவசர கூட்டம்நடத்தினார்கள்.இதில் திருட்டு தடுப்பு தொடர்பாக பாதுகாப்பு செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.இந்த சங்கிலி தொடர்கொள்ளை தொடர்பாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்குபுகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.