சிவகங்கை : தமிழக முழுவதும் மாணவர்களையும், இளைஞர்களையும் பெரிதளவில், பாதிக்கும் போதைப் பொருட்கள் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில், பள்ளி கல்லூரி மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் (cool lip) போன்ற போதை பொருட்கள் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு (15.06.22), ஒரு நாளில் மட்டும் 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 11 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரின் கடையானது உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளின் மூலம் மூடி ,சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் மற்ற கடைகளையும் சீல் வைக்கவும் அவர்களின் உரிமத்தை ரத்து செய்யவும் அபராதம் விதிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது . இந்த ஆண்டில் மட்டும் இதுவரை மாவட்டம் முழுவதிலும் 23 கஞ்சா வழக்குகளும் 86 குட்கா வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு 139 குற்ற வாளிகள், கைது செய்யப்பட்டு 17 கிலோ கஞ்சா பொருள்களும் 1801 கிலோ குட்கா பொருள்களும் ஒரு லாரி ,இரண்டு கார்களும் கைப்பற்றப்பட்டுள்ளன .மேலும் ஒரு குடோன் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது. 30 நபர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன .
மேலும் இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் திரு. செந்தில்குமார், அவர் கூறுகையில் இதுபோன்ற கஞ்சா குட்கா போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் குறிப்பாக பள்ளி/ கல்லூரி வாகனங்களுக்கு அருகிலும் மாணவர்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில், விற்பனை செய்பவர்கள் மீது மிகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள், போதை பொருட்கள் விற்பனை மூலம் வாங்கிய சொத்துக்கள் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் மேலும் அவர்களின் கடைகள் குடோன்கள் ஆகியவை மூடி சீல் வைப்பதோடு லட்சக்கணக்கில், அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார் .
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்