பெங்களூரு: சென்னை உள்ளிட்ட நகரங்களில் இயங்கிவரும் ‘மேக் எ விஷ்’ எனும் தொண்டு நிறுவனம், நிறைவேற முடியாத ஆசையுடன் வாழும் மக்களின் கனவுகளை முடிந்தவரை நிறைவேற்றி வைப்பதை தனது பணியாகக்கொண்டு இயங்கி வருகிறது.
அவ்வகையில், கொடிய நோய்களுக்குள்ளாகி உயிருக்கு போராடிவரும் 4 சிறுவர்கள் மற்றும் ஒரு சிறுமி ஆகிய 5 சிறார்களுக்கு பெங்களூரு நகரில் ஒருநாள் மட்டும் போலீஸ் கமிஷனராக பதவியேற்க வைக்க அந்நிறுவனம் வைத்த கோரிக்கையடுத்து, போலீஸ் தலைமை அலுவலகத்தில், கமிஷனர் பாஸ்கர் ராவ், சீருடையுடன் அவர்கள் 5 பேரையும் ஒருநாள் கமிஷனராக தனது நாற்காலியில் அமரவைத்து அழகுபார்த்தார். தங்களுக்கு வழங்கப்பட்ட மாதிரி கோப்புகளிலும் சிறார்கள் கையொப்பம் இட்டனர்.
மாதிரி ஆயுதங்கள் மற்றும் கைவிலங்குகளும் சிறார்களுக்கு வழங்கப்பட்டது. மருத்துவ சிகிச்சை பெறும் சிறார்களுக்கு மனதளவில் ஒருவித புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் வண்ணம் இந்த ஏற்பாடுகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.