திண்டுக்கல்: போதைப்பொருள் கடத்தில் வழக்கில் திண்டுக்கல் ஏ.பி.ஆர்.ஓ.க்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்ட அதிமுக மகளிரணி செயலாளர் மகன் அருண். இவர் கல்யாணத்துக்கு முதல்வர் பழனிசாமி துணை முதல்வர் ஓபிஎஸ் வந்தனர். இவர் திண்டுக்கல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலராகப் பணியாற்றியவர். இவர் 2015ஆம் ஆண்டு போதைப்பொருளை கடத்திய வாகனத்தை தனது வீட்டு முன்பு நிறுத்தி இருந்தார்.
இதையறிந்த போதை பொருள் தடுப்பு போலீசார் இவரைக் கைது செய்தனர். இவர் வாகனத்தில் இருந்து ரூ. 2 கோடி அளவுக்கு சர்வதேச போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்த போதை பொருள் தடுப்பு போலீசார் அவரை மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கை மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தொடர்ந்து விசாரணை நடத்தியது. இந்நிலையில் மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அருணுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.