நாமக்கல் : நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம், அருகே சேலம், நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில், பெருமாள்கோவில் மேடு பஸ் நிறுத்தம் உள்ளது. இங்குள்ள தனியார் வணிக வளாக கட்டிடத்தில், தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம், செயல்பட்டு வருகிறது. அதே பகுதியை சேர்ந்த, முதியவர் கணேசன், என்பவர் காலை மற்றும் மாலையில் ஏ.டி.எம். மையத்தை சுத்தம் செய்து, பராமரிக்கும் பணியை செய்து வந்தார். இந்த நிலையில், நேற்று அதிகாலை 5 மணி அளவில், கணேசன் வழக்கம்போல் ஏ.டி.எம். மையத்தை, சுத்தம் செய்ய சென்றார். அப்போது ஏ.டி.எம். மையத்தின் ஷட்டர், மூடப்பட்டிருந்தது. இதையடுத்து கணேசன், அங்கிருந்த முருகேசன், என்பவரின் உதவியோடு ஏ.டி.எம். மையத்தின் ஷட்டரை, திறந்து பார்த்தார்
. அப்போது அங்கிருந்த ஏ.டி.எம். எந்திரம் கியாஸ் வெல்டிங், மூலம் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பணம் கொள்ளை போயிருந்தது. மேலும் ஏ.டி.எம். மையம் முழுவதும் புகை மூட்டமாக காட்சி அளித்தது. கணேசன், பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த ரோந்து காவல் துறையினருக்கு, தகவல் தெரிவித்தார். இந்த ஏ.டி.எம். கொள்ளை சம்பவம் தொடர்பாக, புதுச்சத்திரம் காவல் துறையினர் , வழக்குப்பதிவு செய்து, வணிக வளாக கட்டிடத்தில், உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு, விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை 6 தனிப்படை, காவல் துறையினர், வலைவீசி தேடி வருகின்றனர்.