அரியலூர் : அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள வஞ்சினபுரம், கிராமத்தின் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தனவேல். இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களது மகன் ரித்திஸ் (8, . இந்நிலையில் ரித்திஸ், தனது அக்காள் கீர்த்திகாவுடன் (13), அப்பகுதியில் உள்ள பெரிய ஏரியில், குளிக்க சென்றார். அப்போது நீச்சல் தெரியாமல், நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த செந்துறை காவல் துறையினர், அங்கு சென்று, குளத்தில் இருந்து ரித்திசின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரியலூர், அரசு மருத்துவ கல்லூரி, மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.