மதுரை : மதுரை திருநகர் தனியார் மண்டத்தில், எல்.ஐ.சி. ஊழியர் சங்கத்தின் 66வது மாநாடு நடைபெற்றது. மதுரை மாவட்டம், திருநகரில் எல்.ஐ.சி. ஊழியர் சங்க மாநாடு நடைபெற்றது. பொதுத்துறை நிறுவனமான எல்,ஐ,சி,யின் பங்குகளை, தனியாருக்கு தாரை வார்ப்பதை கண்டித்து கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பங்குகளை, 3 1/2 சதம் தனியாருக்கு வழங்கியதை கண்டித்தும், மேலும், தனியாருக்கு பங்குகளை விற்பனை செய்வதை கண்டித்து மாநாடு நடைபெற்றது. விழாவிற்கு, அகில இந்திய தொழிற்சங்க தலைவர் திருமதி. மீனாட்சி சுந்தரம், தலைமை வகித்தார். தொழிற்சங்க துணைத் தலைவர்கள் திரு. முத்துகுமாரசாமி, திரு. சந்திரசேகரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். அகில இந்திய இன்சூரன்ஸ் தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் திரு. வேணு கோபால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முன்னதாக, திருநகரில் உள்ள உள்ள எல்.ஐ.சி அலுவலகத்திலிருந்து பேரணி நடைபெற்றது. இதில் 70 பெண்கள் 200 பேர் கலந்துகொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி