திண்டுக்கல்: திண்டுக்கல்லில் G.T.N கல்லூரியில் நடைபெற்று வரும் தேசிய மாணவர் படை (NCC) வீரர்களின் பயிற்சி வகுப்பில் சிறப்பு விருந்தினராக எஸ்பி.சீனிவாசன் கலந்து கொண்டு மாணவர்களிடம் பயிற்சி குறித்தும், நாட்டுப்பற்று குறித்தும் அறிவுரை வழங்கினார். அப்போது எஸ்.பி. பேசியதாவது: என்சிசி மாணவர்கள் ராணுவத்தின் பயிற்சியை பெறுகின்றனர். இதில் இருப்பவர்கள் எளிதாக போலீஸ் உட்பட பல தேர்வுகளுக்கு வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. தினமும் ஓட்டம்,நடைப்பயிற்சிகள,உடல் பயிற்சிகளை செய்வதால் நமது உள்ளம் மட்டுமல்ல உடலும் வலுப்பெறுகிறது. என்சிசி மாணவர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்ற முடியும். உங்களின் உடலையும் உள்ளத்தையும் தற்சோதனை செய்து கொள்வதற்கு என்சிசி அமைப்பு உதவுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா