கரூர்: கரூர் மாவட்டம் சைபர் கிரைம் குற்றங்களை தடுக்கும் பொருட்டு மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.V.பாலகிருஷ்ணன் IPS மத்திய மண்டல காவல்துறை துணைத்தலைவர். திரு.A.சரவண சுந்தர் IPS மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுந்தர வடிவேல் IPS அவர்களின் உத்தரவின் பேரில் சக்தி Exports கம்பெனியில் பணிபுரியும் ஊழியர்களிடம் நேரில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்று (07/04/2022) சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. திருமதி.கீதாஞ்சலி அவர்களின் வழிகாட்டுதலின் படி கரூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் சக்தி Exports கம்பெனியில் இணையதளம் மூலமாக நடைபெற்று.
வரும் குற்றங்களான போலியாக செயலிகளை (App) உருவாக்கி அதன் மூலம் பாமர மக்களுக்கு ஆசைகளை உருவாக்கி மாய வலையில் சிக்க வைப்பது தொடர்பாகவும், இதுபோன்ற பல்வேறு போலியான செயலிகள்( Power Bank, Fundamelon, colour Trading, Etc.,) மூலம் ஏற்படுத்தபடும் பண மோசடி குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் அப்பகுதியில் உள்ள கடைகளில் சைபர் கிரைம் மோசடி குறித்து புகார் அளிக்கும் தொடர்பு எண் 1930 மற்றும் இணைய முகவரி www.cybercrime.gov.in அடங்கிய போஸ்டர்கள் ஒட்டியும் விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டது.