கோவை : கோவை சிங்காநல்லூர், காவல் ஆய்வாளர் திரு.அருண், அவர்களிடம், தர்ஷா வயசு (33), அவர் அளித்த புகாரின் பெயரில் ஆய்வாளர், நடத்திய விசாரணையில் மேற்கண்ட நபரும், அவரது நண்பர்களும், கடந்த (06.05. 2022) ஆம் தேதி நெசவாளர் காலனியில், உள்ள ஒயின்ஷாப்பில் சென்று இரவில் மதுபானம், கேட்டுள்ளார்கள் அங்கு பாரில் வேலை செய்யும் பூவரசன், மற்றும் மேகநாதன், இப்போது சரக்கு எதுவும் கிடையாது , என்று கூறியுள்ளார்கள் இதனால் கோபமடைந்த திருநங்கை தர்ஷா, மற்றும் அவரது நண்பர்கள் பூவரசன், மற்றும் மேகநாதனிடம், தகராறு செய்துள்ளார்கள்.
அதன் பின்பு கடந்த, (07. 05 2022), ஆம் தேதி இரவு சுமார் 07.30, மணிக்கு மேற்படி தர்ஷா, அவர் நண்பர்களும் மிராஜ் தியேட்டர், அருகே நடந்து செல்லும்போது, மேகநாதன் மற்றும் பூவரசன், ஆகிய இருவரும் மேற்கண்ட நபர்களை அழைத்து, எங்களிடமா சண்டை போடுகிறீர்கள், என்று கூறி பூவரசன் இடுப்பில் வைத்திருந்த காய்கறி வெட்டும் , கத்தியை எடுத்து கழுத்தில் மற்றும் தோள்பட்டையில், வெட்டியுள்ளார். பின்பு அருகில் இருந்த மேகநாதன் பூவரசன் சேர்ந்து, கொலை மிரட்டல் விடுத்து. சென்றுள்ளார்கள் பின்பு புகார் வழக்கு, பதிவு செய்து குற்ற எண் 297/22,294,324,506(2) IPC வழக்குகள் பதியப்பட்டு மேற்கண்ட பூவரசன், மற்றும் மேகநாதன், ஆகிய இருவரையும் தேடி கண்டுபிடிக்கும், பொருட்டு இன்று (08.05 .2022 ), ஆம் தேதி சிங்காநல்லூர், பேருந்து நிலையத்தில் வைத்து இருவரையும் காவல் துறையினர், கைது செய்து நீதிமன்ற, காவலுக்கு அனுப்ப பட்டனர்.