சென்னை : மாங்காடு அருகே கொரியர், டெலிவரி செய்யும் ஊழியரின், பையை, மர்ம நபர்கள் திருடி சென்றனர். மாங்காடை அடுத்த முகலிவாக்கம், பட்டம்மாள் நகரில் உள்ள, ஒரு வீட்டிற்கு, டெலிவரி செய்ய நேற்று முன்தினம் ஊழியர் சென்றார். வீட்டின் வெளியே இருசக்கர வாகனத்தின் மீது, கொரியர், பையை வைத்துவிட்டு, பொருளை மட்டும் எடுத்துக்கொண்டு வீட்டிற்குள் சென்றார். சிறிது நேரம் கழித்து வெளியே வந்தபோது, பை மாயமாகியிருந்து. திருடப்பட்ட பையில், கிரெடிட், டெபிட் கார்டுகள், பாஸ்போர்ட், மொபைல் போன் என, விலையுயர்ந்த பொருட்கள் இருந்தன. இது குறித்து மாங்காடு காவல் துறையில், புகார் அளிக்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு, கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், பையை திருடி சென்றது பதிவாகியிருந்தது. இதன் அடிப்படையில், காவல் துறையினர் , விசாரித்து வருகின்றனர்.