சென்னை : சென்னை திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகே உள்ள நெற்குன்றம் ஊராட்சிக்குட்பட்ட செக்கஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு (35), இவருடைய தாய் பாப்பாத்தி (55), இவர், நெற்குன்றம் ஊராட்சி மன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். நேற்று மாலையில் தன் குடும்பத்துடன் வீட்டில் இருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், பாப்பாத்தி வீட்டின் மீது வெடிகுண்டை வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
நல்லவேளையாக வெடிகுண்டு வீச்சில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதுபற்றி தகவல் அறிந்துவந்த சோழவரம் காவல் துறையினர், அங்கு சிதறிக்கிடந்த வெடிகுண்டு பாகங்களை சேகரித்து தடயவியல் ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் (22), என்ற வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.