செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் செல்வராஜ் நகர் டாஸ்மாக் கடை அருகே திருட்டுத்தனமாக மது விற்கப்படுவதாக கூடுவாஞ்சேரி மதுவிலக்கு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு காவல் துறையினர், விரைந்து சென்று பார்த்தபோது டாஸ்மாக் கடை அருகே திருட்டுத்தனமாக மது விற்று கொண்டிருந்த மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்த வேனு (43), என்பவரை காவல் துறையினர், கைது செய்து அவரிடமிருந்து 17 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து கூடுவாஞ்சேரி மதுவிலக்கு காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.