செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம், மண்ணிவாக்கம் ராதாகிருஷ்ணன் தெருவை, சேர்ந்த தினேஷ் (32), இவருக்கும் மண்ணிவாக்கம், சுந்தர் நகர் பகுதியை சேர்ந்த, ஜான் என்பவருக்கும் கடந்த உள்ளாட்சி, தேர்தலில் இருந்து முன்விரோதம் இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம், மாலை தினேஷ் மோட்டார் சைக்கிளில் மண்ணிவாக்கம் விரிவு பகுதி முருகன் கோவில் அருகே செல்லும்போது, காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் தினேசை வழிமறித்து அவரது வயிற்றில், கத்தியால் குத்தியும், தலையின் பின்புறம் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். இதில் ரத்தவெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்த, தினேசை அக்கம்பக்கத்தினர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில், சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தினேஷ் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து ஓட்டேரி காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து தினேசை வெட்டிய, ஜான் உள்பட 5 பேர் கொண்ட கும்பலை, வலைவீசி தேடி வருகின்றனர்.