திருநெல்வேலி: பாளையங்கோட்டை மத்திய சிறையில் பணிபுரிந்த இரண்டாம் நிலைக் காவலர் திரு. மந்திரம் @ மகாராஜா (2017 பேட்ஜ்) கடந்த 26.05.2019 அன்று எதிர்பாராத சாலை விபத்தில் உயிரிழந்தார்.
அவரின் குடும்பத்தினருக்கு பொருளாதார ரீதியாக உதவும் பொருட்டு, தமிழ்நாடு சிறைத்துறையின் பணியாளர்கள் ஒன்றினைந்து ரூ. 5,06,055 தொகையினை அவரின் பெற்றோரின் வங்கிக் கணக்கில் செலுத்தி அதற்கான வங்கி கணக்கு புத்தகத்தை சிறைத்துறை துணை தலைவர் (மதுரை சரகம்) திரு. பழனி அவர்களும், பாளை மத்திய சிறையின் கண்காணிப்பாளர் திரு. கிருஷ்ணகுமார் அவர்களும் இணைந்து அவரது பெற்றோர்களிடம் வழங்கினர்.
பங்களிப்பு செய்த அணைத்து சிறை பணியாளர்களுக்கும் காவலரின் குடும்பத்தினரின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.