திருநெல்வேலி: தமிழக காவல்துறையில் 38 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வுபெரும் உதவி ஆய்வாளருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டு. திருநெல்வேலி மாவட்டம் சீதபற்பநல்லூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக திரு.கனகராஜ், என்பவர் பணிபுரிந்து வருகிறார். மேற்படி உதவி ஆய்வாளர் அவர்கள் தமிழ்நாடு காவல்துறையில் 1984- ம் ஆண்டு இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்து சென்னை மற்றும் வேலூரில் பயிற்சி முடித்து சென்னையில் பணியாற்றிவந்துள்ளார். இவர் பணியின் போது ஐ.பி.எஸ் அதிகாரிகளான திரு.ஸ்ரீபால், திரு.தேவாரம், திரு.நடராஜன், திரு.விஜயகுமார், திரு.K.K.நாயர், ஜாங்கிட் மற்றும் திரு.பொன்மாணிக்கவேல் அவர்கள் தலைமையிலான தனிப்படையில் பணியாற்றி வந்துள்ளார்.
1995-ம் ஆண்டு சென்னையில் முக்கிய பிரமுகர்கள் குழந்தைகளை கடத்தி பணம் கேட்டு மிரட்டல் விடுத்து பணம் கொடுக்கவில்லை என்றால் குழந்தைகளை கொலை செய்து வந்த கடத்தல்காரர்களை கைது செய்த திரு. விஜயகுமார்.,IPS, அவர்கள் தலைமையில் 32 தனிபடைகள் அமைக்கப்பட்டதில் திரு.கனகராஜ் அவர்களும் இடம் பெற்றிருந்தார். பின்னர் 1997-1998ம் ஆண்டு குற்றப்பிரிவில் பணியாற்றி கொண்டிருக்கும் போது சென்னையில் பல்வேறு திருட்டு, வழிப்பறி, கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த குற்றவாளிகளை கண்டுபிடித்து ஆந்திரா, ஏஜிகுப்பம் மற்றும் நகரி ஆகிய பகுதிகளுக்கு சென்று எதிரிகளை கைது செய்து வந்துள்ளார்.
பின்னர் 2021- ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்திற்கு பணிமாறுதல் வந்து சீதபற்பநல்லூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த எதிரிகளை உடனடியாக கைது செய்து சிறப்பாக பணி செய்து வந்தார். இந்நிலையில் உதவி ஆய்வாளர் அவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் விருப்ப ஓய்வு பெற மனு அளித்திருந்த நிலையில் 31.03.2022-ம் தேதி விருப்ப ஓய்வு பெற்று செல்லும் உதவி ஆய்வாளர் அவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சரவணன்.,IPS அவர்கள், காவல்துறையில் 38-ஆண்டு பணி செய்த பொன்னான நேரங்களை அவர்களிடமிருந்து கேட்டறிந்து அவரை பாராட்டி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள அறிவுரை வழங்கியும் இனிவரும் காலங்களில் குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவழித்து மகிழ்ச்சியாக இருக்கும்படி வாழ்த்து தெரிவித்துள்ளார்.