தர்மபுரி : தர்மபுரி மாவட்டம், பச்சினம்பட்டி கிராமத்தில், பெருமாள் லட்சுமி தம்பதியரின் மூத்த மகனாக காவேரியப்பன், 1962 ஆம் ஆண்டு பிறந்தவர் இரு தங்கைகள் மற்றும் ஒரு தம்பியுடன் குடும்பத்தில், மூத்த மகனாக பிறந்த இவர் படிக்கும் காலத்திலேயே தமிழ்நாடு காவல்துறை பணியில், பணியாற்ற வேண்டும் என்ற பேரவாவின் காரணமாக 1986 ஆம் ஆண்டு தர்மபுரி ஆயுதப்படை காவலராக பணியில், சேர்ந்தார். 21 ஆண்டுகள் காவல்துறையில் சாதாரண காவலராக நேர்மையாக உழைத்ததின் காரணமாக கடந்த 2007 ஆம் ஆண்டு காவல்துறை உதவி ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றார். தர்மபுரி ஆயுதப்படையில், உதவி ஆய்வாளராக பதவியேற்றபின், தர்மபுரி போக்குவரத்து காவல் துறையிலும் கடைசியாக பென்னாகரம் போக்குவரத்து காவல்துறையில், பணியாற்றி கடந்த ஜூன் 30-ம் தேதி பணி ஓய்வு பெற்றார்.
இவரின் பணி ஓய்வு பாராட்டு விழா நேற்று தர்மபுரி வெண்ணாம்பட்டி ஆயுதப்படை காவல்துறை மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், முன்னாள் நகர மன்ற தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார், தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி திரு. வெங்கடேஸ்வரன், காவல்துறை ஏ.டி.எஸ்.பி.க்கள் திரு. குணசேகரன், திரு. புஷ்பராஜ், காவல்துறை அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி துறை பிரதிநிதிகள் பலர் வாழ்த்தி பேசினர்.
தர்மபுரியில் இருந்து நமது நிருபர்
க.மோகன்தாஸ்.