செங்கல்பட்டு : மதுராந்தகம் ஒன்றியம், மங்கலம் ஊராட்சிக்குட்பட்ட, நெல்வாய் கூட்டுச்சாலையில், விநாயகர் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு, கோவிலில் புகுந்த மர்ம நபர்கள், உண்டியலை உடைத்து பணம் திருடிச்சென்றனர். கோவில் நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. படாளம் காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.