அரியலுார் : அரியலுார் மாவட்டம், உடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த (16), வயது சிறுமியை, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக, கடந்த மாதம், அதே பகுதியைச் சேர்ந்த சாந்தா, (28), உட்பட 12 பேரை, ஜெயங்கொண்டம், அனைத்து மகளிர்காவல் துறையினர், கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
இவர்கள் 12 பேரையும், குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என, அரியலுார் மாவட்ட எஸ்.பி., திரு. பெரோஸ்கான் அப்துல்லா, பரிந்துரை செய்தார். அதன்படி, 12 பேரையும் குண்டர் சட்டத்தில், கைது செய்து சிறையில் அடைக்குமாறு, அரியலுார் ஆட்சியர் திருமதி. ரமணசரஸ்வதி, உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகல், சிறைத் துறை அதிகாரிகளிடம், நேற்று வழங்கப்பட்டது.