மதுரை : மதுரை மாவட்டம், உசிலம்பட்டி மகளிர் காவல் ஆய்வாளர் திரு. கண்ணாத்தாள், எஸ்.பி., தனிப்படை காவல் துறையினர் , தேனி ரோட்டில் முத்துப்பாண்டிபட்டி விலக்கில், சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த இரு கார்கள், டூ வீலரில் தடைசெய்த புகையிலை மூடைகள், இருப்பது தெரிந்தது. விசாரணையில், கடைகளில் விற்பதற்காக உசிலம்பட்டி கொங்கப்பட்டி பிரகாஷ் (25), கிருஷ்ணகிரி மாவட்டம் ராமச்சந்திரம் கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி (24), தேன்கனிக்கோட்டை சின்னட்டி கிராமம் அம்பரீஷ் (28), சங்கர் (34), தர்மபுரி மாவட்டம் பிடனேரி விக்னேஷ் (30), ஆகியோர், கொண்டு வந்தது தெரியவந்தது. அவர்களை கைது செய்த காவல் துறையினர் , 67 மூடைகளில் 750 கிலோ புகையிலை பாக்கெட்கள், மற்றும் வாகனங்களை பறிமுதல் செய்தனர். டி.எஸ்.பி., திரு. நல்லு, தலைமையிலான காவல் துறையினரை எஸ்.பி., திரு.பாஸ்கரன், பாராட்டினார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி