ஈரோடு : ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம் அருகே உள்ள கம்புளியம்பட்டி, வரப்பாளையம் மேற்கு சாணார்பாளையம் கிராமத்தில் சாராயம் காய்ச்சி வருவதாக, ஈரோடு டவுன் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்க துணை போலீஸ் சூப்பிரண்டு திரு. சண்முகம் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஆய்வாளர் திருமதி. கவிதாலட்சுமி, தலைமையில் காவல் உதவி ஆய்வாளர் திரு. மோகனசுந்தரம், ஏட்டுகள் திரு. கிருஷ்ணமூர்த்தி, திரு. ராஜேஷ்கண்ணா, ஆகியோர் நேற்று மாறுவேடத்தில் மேற்கு சாணார் பாளையம் கிராமத்துக்கு, சென்று கண்காணித்தனர்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த நாகப்பன் என்பவருடைய, மகன் மாரிமுத்து (29) , சாராயம் காய்ச்சி விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. மாரிமுத்துவின் வீட்டுக்கு போலீசார் சென்று சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டில் 450 லிட்டர் சாராய ஊழல்கள், கேன்களில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மாரிமுத்துவை, கைது செய்து பெருந்துறை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். அவரை 15 நாட்கள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு சபீனா உத்தரவிட்டார்.
ஈரோட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்கள் :