ஈரோடு: பணியின் போது உயிரிழந்த காவலர்கள் மற்றும் சி.ஆர்.பி.எப் வீரர்களுக்கு, ஈரோடு காவல்துறையினர்
சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் ஹாட் ஸ்பிரிங்ஸ் என்ற இடத்தில், சீனப் படையினர் கடந்த 1959-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி திடீர் தாக்குதல் நடத்தினர். அதில் மத்திய பாதுகாப்புப் படை காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர். ஏழு பேர் கைது செய்யப்பட்டனர், மீதமுள்ளவர்கள் தப்பினார்கள். மூன்று வாரங்களுக்குப் பின்னரே இறந்த காவலர்களின் உடலை சீனர்கள் திரும்பி அனுப்பினர்.
1960 ஜனவரி மாதம் மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், அக்டோபர் 21 ம் தேதி காவலர் வீர வணக்க நினைவு நாள் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. லடாக் பகுதியில் கொல்லப்பட்ட காவலர்களும், பணியின் போது கொல்லப்பட்ட அனைத்து காவல் அதிகாரிகளும், காவலர்களுக்கும் மரியாதை செலுத்தும் விதமாக இந்த நினைவு நாள் அனுசரிக்கப்படுகின்றது.
இதன்படி, ஈரோடு மாவட்ட காவல்துறையினர் சார்பில், நேற்று ஈரோடு பன்னீர் செல்வம் பார்க் சிக்னல் அருகே வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. ஈரோடு காவல் கண்காணிப்பாளர் திரு.சக்தி கணேசன் தலைமையில் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.சேகர், எட்டியப்பன் மற்றும் காவல்துறையினர் வீரவணக்கம் செலுத்தி உறுதி மொழி எடுத்து கொண்டனர்.
வேலூரிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்