ஈரோடு : பெருந்துறை, வரப்பாளையத்தை சேர்ந்த, 18 வயது சிறுமி, தனியார் கம்பெனிக்கு வேலைக்கு, சென்று வந்தார். கடந்த, 10ம் தேதி வேலைக்கு சென்றவர், வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த பெற்றோர், பெருந்துறை காவல் துறையில் , பெற்றோர் புகார் செய்தனர். விசாரணையில், கேரளா, வடக்கஞ்சேரியை சேர்ந்த, அஜய், (25), சிறுமியை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து கொண்டது, தெரிந்தது. போக்சோ சட்டத்தில் அஜயை கைது செய்த காவல் துறையினர், ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
—————————————
சாலையோரம் மருத்துவ கழிவு ஈரோடு, பி.பெ.அக்ரஹாரத்தில் இருந்து, கனிராவுத்தர் செல்லும் வழியில், அரசு மேல்நிலை பள்ளி அருகே, மருத்துவ கழிவு கிடப்ப தாக, நேற்றிரவு தகவல் கிடைத்தது. கருங்கல்பாளையம் காவல் துறையினர், சென்று பார்த்தனர். காலி ஊசி மருந்து பாட்டில், சிரஞ்ச், நீடில், குளுக்கோஸ், ஏற்ற பயன்படும் டியூப் உள்ளிட்டவை சாலையோரம் கிடந்தது. மாநகராட்சி துாய்மை பணியாளர்கள், மருத்துவ கழிவுகளை முழுமையாக அகற்றினர். மருத்துவ கழிவு குவியலில், பள்ளிபாளையம் சங்ககிரி பைபாஸ் சாலை பகுதியில், உள்ள, ஒரு மருந்துக்கடையின் பில் இருந்தது. அதில் டாக்டர் ஒருவரின் பெயரும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் விசாரணை நடத்த, மாநகராட்சி அலுவலர்கள் முடிவு செய்துள்ளனர்.
ஈரோட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்கள் :
R.கிருஷ்ணமூர்த்தி
ஈரோடு மாவட்ட தலைவர்
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா
N.செந்தில்குமார்
ஈரோடு மாவட்ட பொது செயலாளர்
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா