திருவள்ளூர்: மீஞ்சூர் அருகே கள்ள காதல் விவகாரத்தில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை,பொன்னேரி,மார்ச்.12-மீஞ்சூர் அடுத்த வாயலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன்(31) இவரது மனைவி வசந்தி வாயலூர் குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றனர் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த காமாட்சி(29) என்பவர் கோயம்பேட்டில் உள்ள டீக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். அங்கு வேலை பார்த்த முருகன் காமாட்சி இருவருக்குமிடையே தொடர்பு ஏற்பட்டதால் முருகன் காமாட்சி இருவரும் மேல்மலையனூர் கோயிலில் திருமணம் செய்து தனியாக வாழ்ந்து வந்த நிலையில் முருகனின் மனைவி வசந்தி தனது கணவன் காணவில்லை என காட்டூர் காவல் நிலையத்தில் கடந்த மாதம் 16ஆம் தேதி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் இருவரையும் பாண்டிச் சேரியில் மீட்டு சம்மதத்துடன் முருகன் காமாட்சி பிரிந்து சென்ற நிலையில் தனியாக வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில் மனமுடைந்த காமாட்சி நேற்று இரவு வயலூரில் உள்ள முருகனின் வீட்டிற்கு ஆட்டோவில் பெட்ரோல் கேனை எடுத்துக்கொண்டு சென்று தன்னுடன் வந்து வாழுமாறு அழைத்ததாகவும் அதற்கு அவர் மறுத்ததால் காமாட்சி தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார்அவரதுஅலறல்சத்தம்கேட்டுஓடிவந்தஅக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றும் அவர் உடல் முழுவதும் தீயில் கருகியநிலையில்சம்பவஇடத்திலேயேகாமாட்சிபரிதாபமாக உயிரிழந்தார் இறப்பதற்கு முன்பாக தான் கர்ப்பமாக இருப்பதாகவும் அவர் கூறியதாக தெரிகிறது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குவந் தகாட்டூர் காவல் துறையினர் .உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்து இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து முருகனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்