கரூர் : கரூர் வடிவேல் நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன், இவருடைய மனைவி பிருந்தா (30), இவர்களுக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. தற்போது இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். கார்த்திகேயனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி, குடும்ப பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. இதனால் பிருந்தா, மன வேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று பிருந்தா வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
இதைக்கண்ட அக்கம், பக்கத்தினர் பிருந்தாவை, மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி பிருந்தா பரிதாபமாக இறந்தார்.இந்த தற்கொலை குறித்து பிருந்தாவின் தந்தை முருகேசன், கரூர் டவுன் காவல் நிலையத்தில், புகார் கொடுத்தார். அதன்பேரில் காவல் ஆய்வாளர் திரு. நாகராஜன், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.