கரூர் : பூதப்பாண்டி, மே 13, பூதப்பாண்டி அருகே இறச்சகுளம் பகுதியை சேர்ந்தவர் சிவா(42), வழக்கறிஞர். இவர் நாகர்கோவிலில் தனது குடும்பத்தினருடன், வசித்து வருகிறார். சிவாவும் அவருடைய மனைவியும், சம்பவத்தன்று இறச்சகுளம் பகுதியில் உள்ள கோவிலுக்கு, சென்று சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த சிவகுமார் (28), சுமீல் குமரன் (30), ஆகிய இருவரும் சிவாவின் மனைவியை, அவதூறாக பேசியுள்ளனர். இதை தட்டிக்கேட்ட கணவர் சிவாவை, தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த சிவா, அவரது மனைவி இருவரும் பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில், பெற்று வருகின்றனர். இது குறித்து சிவா, அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் , பூதப்பாண்டி, சிவகுமார்,சுமீல் குமரன் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.