சென்னை: கிண்டி பகுதியில் சட்டவிரோதமாக போதை மாத்திரைகள் விற்பனைக்காக வைத்திருந்த 3 நபர்கள் கிண்டி காவல் குழுவினரால் கைது. 2,980 போதை மாத்திரைகள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல். Guindy Police arrested 3 persons for possession of drug pills. 2980 drug pills and two wheeler were seized. சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் “போதை தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ள உத்தரவிட்டதின்பேரில், கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின்பேரில், துணை ஆணையாளர்கள் கண்காணிப்பில், உதவி ஆணையாளர்கள் மேற்பார்வையில்.
காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு, தங்களது காவல் நிலைய எல்லைகளில் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக கிண்டி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் 24.03.2022 அன்று மதியம், கிண்டி தொழிற்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகில் கண்காணித்தபோது, அங்கு ஹோண்டா ஆக்டிவா இருசக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்தி விசாரணை செய்து, அவரது வாகனத்தை செய்தபோது, அதில் டைடல் மற்றும் நைட்ரவிட் உள்ளிட்ட மாத்திரைகள் பெருமளவு மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
அதன்பேரில், சட்டவிரோதமாக மாத்திரைகள் வைத்திருந்த 1) மணிகண்டன் (வ/25) மதுரவாயல் 2) சதிஷ் (வ/30) தி.நகர் 3) ரஞ்சித்குமார் (வ/28) சைதாப்பேட்டை ஆகிய 3 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2,000 டைடல் (Tydol) மாத்திரைகள், 690 நைட்ரவிட் (Nitravet) மாத்திரைகள், 160 ரதிக் (Radik) மாத்திரைகள், 130 டபால் (Tapal) மாத்திரைகள் என மொத்தம் 2,980 மாத்திரைகள், மற்றும் ஹோண்டா ஆக்டிவா இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேற்படி எதிரிகள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.