கோவை : மே 6 தேனி மாவட்டம் , ஆண்டிப்பட்டி பக்கமுள்ள கொண்டமநாயக்கன்பட்டியை, சேர்ந்த மனோகரன் (60), சென்ட்ரிங் காண்ட்ராக்ட், தொழில் செய்து வருகிறார். இவரது செல்போன் எண்ணுக்கு வந்த அழைப்பு மூலம் 2 பேர், அறிமுக மானார்கள். அவர்களிடம் தங்களிடம் விலை உயர்ந்த இரிடியம், இருப்பதாகவும், இதன் விலை ரூ1 கோடி ஆனால். எங்களுக்கு ரூ 30 லட்சம் மட்டும் கொடுத்தால், போதும் என்று கூறினார்கள் . ரூ 30. லட்சம் பணத்துடன் கோவை சிங்காநல்லூர், பேருந்து நிலையம், அருகே வருமாறு கூறினார்கள் . இதை நம்பி மனோகரன், ரூ30 லட்சத்துடன் கோவைக்கு வந்தார். சிங்காநல்லூர் பஸ் நிலையம் அருகே, உள்ள ஒரு லாட்ஜ்க்கு, வருமாறு அந்த கும்பல் அழைத்தது. மனோகரன் பணத்துடன் லாட்ஜுக்கு சென்றார்.
பையை பெற்றுக்கொண்ட, மனோகரன் ரூ. 30 லட்சத்தை அவர்களிடம் கொடுத்தார். இந்த பையை வழியில் வைத்து வெளியே எடுத்தால், காவல் துறையினர் , பிடித்துக் கொள்வார்கள். வீட்டில் போய் தான் எடுக்க வேண்டும். என்று மீண்டும் கூறினார்கள். இதை நம்பி வீட்டுக்குச் சென்று பையில், இருந்த பார்சலை பிரித்து பார்த்தபோது, அதில் செங்கல் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து மனோகரன் சிங்காநல்லூர், காவல் நிலையத்தில் புகார் செய்தார். உதவி ஆய்வாளர் திரு. கார்த்திகேயன், வழக்கு பதிவு செய்து மோசடி கும்பலை, தேடி வந்தார். அதன் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையில், மோசடியில் ஈடுபட்டது, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்த, வேலுசாமி (22) அவரது நண்பர்களான, தேனியை சேர்ந்த நிர்மல் செல்வன், வினோத் குமார்., என்பது தெரிய வந்தது. அவர்கள் 3 பேரையும் காவல் துறையினர் ,நேற்று கைது செய்தனர்.