இராமநாதபுரம்: மாவட்டத்தில் 73-வது சுதந்திர தின விழா வெகு விமர்ச்சையாக கொண்டாடப்பட்டது. இராமநாதபுரம் மாவட்ட சரக காவல் துணைத்தலைவர் திரு.ரூபேஸ்குமார் மீணா, இ.கா.ப., மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஓம்பிரகாஷ் மீணா, இ.கா.ப., ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் திரு.வீர ராகவ ராவ் அவர்கள் சுதந்திர தின கொடியேற்றி வைத்து காவல் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள், காவல் ஆளினர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் ஆகிய 43 பேருக்கு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது. பள்ளிக் குழந்தைகளின் கோலாகல கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.