இராமநாதபுரம்: தமிழ்நாடு முழுவதும் வாகன விபத்துக்களை தடுக்கும் பொருட்டு காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் வாகன சோதனை மேற்கொண்டு, வாகன விபத்துக்கள் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது. வாகன சோதனையின்போது விதிக்கப்படும் அபராத தொகையினை காவல்துறையினர் வசூலிப்பதில் சிரமம் இருந்து வருகிறது. இதனை தவிர்க்கும் பொருட்டு, வாகன சோதனை மேற்கொள்ளும் காவல்துறை அதிகாரிகள் நேரடியாக பணம் பெறாமல், E-Challan முறையில் ATM கார்டு, Paytm, Credit கார்டு மற்றும் Debit கார்டுகள் மூலம் பணம் செலுத்தும் முறை 10.08.2019-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக இராமநாதபுரம் மாவட்டத்தில் 13 காவல் நிலையங்களுக்கு E-Challan முறையில் பணம் செலுத்தும் கருவி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியானது இராமநாதபுரம் புறநகர் பணிமனை அருகில், 10.08.2019-ம் தேதியன்று மாலை சுமார் 17.00 மணியளவில் நடைபெற்றது.
இதில் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஓம்பிரகாஷ் மீணா, இ.கா.ப மற்றும் திரு.ஆல்ட்ரின், துணை காவல் கண்காணிப்பாளர் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு, (பொறுப்பு) இராமநாதபுரம் உட்கோட்டம் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவங்கி வைத்து, திருமதி.சுந்தராம்பாள், காவல் நிலைய ஆய்வாளர் அனைத்து மகளிர் காவல் நிலையம் (பொ) இராமநாதபுரம் நகர், திரு.தனபால், காவல் ஆய்வாளர், பஜார் காவல் நிலையம், திரு.பிரபு, காவல் ஆய்வாளர், கேணிக்கரை காவல் நிலையம் மற்றும் போக்குவரத்து காவல் நிலையத்திற்கு E-Challan கருவி வழங்கினார். அதனை தொடர்ந்து, மேற்படி கருவியைக் கொண்டு அபராதம் விதிப்பது பற்றி செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டு, மோட்டார் வாகன வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.