இராமநாதபுரம்: மாவட்டம் அபிராமம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான உடையநாதபுரத்தைச் சேர்ந்த சதீஸ்குமார், த/பெ.தனுஷ்கோடி என்பவர் அவரது மனைவி சண்முக சுந்தரி என்பவரிடம், மது அருந்த பணம் கேட்டதற்கு, தரமறுத்ததால் அவரது மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்தார். இது தொடர்பாக அபிராமம் காவல் நிலைய குற்ற எண் 06/2012 u/s 307 @ 302 IPC-ன் பிரகாரம் வழக்கு பதிவு செய்தனர்.
இவ்வழக்கின் விசாரணை முடிந்து நேற்று 06.09.2019-ம் தேதி மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி திருமதி.P.பகவதியம்மாள் அவர்கள் மேற்படி எதிரியான சதீஸ்குமார் என்பவருக்கு ஆயுள்தண்டனை மற்றும் 3,000/- ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்கள்.