இராமநாதபுரம்: பரமக்குடி நகர் மற்றும் தொண்டி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் கடத்தியதாக 01 டாடா பிக்கப், 01 JCB மற்றும் ஒரு ட்ராக்டர் ஆகியவை கைப்பற்றப்பட்டு, 03 பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக 1) கருப்புசாமி, த/பெ கண்ணன், மூவேந்தர் நகர், பரமக்குடி, 2) பிரபு, த/பெ தோண்டிராஜ், புதுப்பட்டிணம், 3) சத்தியமூர்த்தி, த/பெ சுந்தர்ராஜ், சாத்தனூர் ஆகிய 03 நபர்களை கைது செய்து மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.