சென்னை: இராயப்பேட்டை பகுதியில் வீடு வாடகைக்கு கேட்பது போல நடித்து, செல்போன் மற்றும் ரூ.10,000/-, ஏடிஎம் கார்டு அடங்கிய மணிபர்ஸ் ஆகியவற்றை திருடிச் சென்ற இப்ராகிம் என்பவர் இராயப்பேட்டை காவல் குழுவினரால் கைது. செல்போன், மணிபர்ஸ் மற்றும் இருசக்கர வாகனம் கைப்பற்றப்பட்டது.
சென்னை, பெரியமேடு பகுதியில் வசிக்கும் அயூப் அகமது (வ/24) என்பவர், இராயப்பேட்டை, SPS கோயில் தெரு, எண்.108 என்ற முகவரியிலுள்ள ஒரு கடையில் வேலை செய்து வருகிறார். இதே கட்டிடத்தில் ஒரு வீடு காலியாக உள்ளதால், வீடு வாடகைக்கு விடப்படும் என பலகை வைக்கப்பட்டு, அந்த வீட்டின் சாவி மேற்படி கடையில் உள்ளது. 02.03.2022 அன்று இரவு சுமார் 07.30 மணியளவில், இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு நபர் காலியாக உள்ள வீட்டை பார்க்க வேண்டும் என கேட்டபோது, அயூப் அகமது கடையிலிருந்த சாவியை எடுத்துக் கொண்டு மேற்படி வீட்டை சுற்றி காண்பித்துவிட்டு, அவர் சென்ற பிறகு பார்த்தபோது, அயூப் அகமது மேற்படி வீட்டில் வைத்திருந்த செல்போன், ரூ.10,000/- பணம், ஏடிஎம் கார்டு, ரேஷன் கார்டு உள்ளிட்டவை அடங்கிய மணி பர்ஸ் ஆகியவை திருடு போயிருந்தது தெரியவந்தது.
அயூப் அகமது இது குறித்து இராயப்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.இராயப்பேட்டை குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்தினருகில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, எதிரி தப்பிச் சென்ற இருசக்கர வாகனத்தின் பதிவெண் மற்றும் அடையாளங்களை வைத்து, மேற்படி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட இப்ராகிம் (வ/20) கொடுங்கையூர் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து புகார்தாரரின் செல்போன், ஏடிஎம் கார்டு, ரேஷன் கார்டு அடங்கிய மணிபர்ஸ் மற்றும் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் ஆகியவை கைப்பற்றப்பட்டது. மேற்படி குற்ற எதிரி மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
அப்துல் ஹாபிஸ்