மதுரை : திருப்பரங்குன்றம் பொறியியல் கல்லூரி விடுதியில் இன்சினியர் மாணவர் விஷம் குடித்து தற்கொலை
மதுரை மார்ச் 12 திருப்பரங்குன்றத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி ஹாஸ்டலில் தங்கி படித்த மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். ராமநாதபுரம் மாவட்டம் களையனூர் பெருவயல் என்ற ஊரைச் சேர்ந்தவர் நடராஜன் மகன் பிரிதிவிராஜன் 20. இவர் திருப்பரங்குன்றத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ. மூன்றாமாண்டு படித்து வந்தார்.
இவர் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்த நிலையில் இவர் திடீரென்று விஷம் குடித்து தங்கியிருந்த அறையில் மயங்கி கிடந்தார் .அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த மாணவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார். இதுகுறித்து திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி