சென்னை : ஆவடி அடுத்த அண்ணனுார் ஏரிக்கரை, பகுதியைச் சேர்ந்தவர் முத்து, (24), பழைய இரும்பு பொருட்கள் வாங்கி, விற்கிறார். நான்கு ஆண்டுகளாக, மனைவியை, பிரிந்து வாழ்கிறார். நேற்று இரவு முத்துவும், மோரை பகுதியைச் சேர்ந்த இவரது உறவினர் விக்கி, (19), என்பவரும், அண்ணனுார் ரயில்வே பணிமனை, அருகே மது அருந்தி உள்ளனர். அப்போது முத்து, விக்கியின் தங்கையை தனக்கு திருமணம் செய்து, வைக்குமாறு வற்புறுத்தியதாக தெரிகிறது. இதில் ஏற்பட்ட தகராறில், அங்கிருந்த பெரிய கல்லை எடுத்து, முத்துவின் தலையில் விக்கி தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த முத்துவை, அங்கிருந்தோர் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், சேர்த்துவிட்டு, விக்கியை பிடித்து ஆவடி ரயில்வே காவல் துறையில், ஒப்படைத்தனர். ஆவடி ரயில்வே காவல் துறையினர், வழக்கு பதிந்து, விக்கியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.