சென்னை : ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டை, பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ், (58), ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது மனைவி குணசுந்தரி, (49) நேற்று காலை, பாடியநல்லுாரிலுள்ள உறவினர் வீட்டு துக்க, நிகழ்ச்சிக்கு சென்று, குணசுந்தரி இருசக்கர வாகனத்தில், வீடு திரும்பினார். அப்போது வண்டலுார், மீஞ்சூர் வெளி வட்ட சாலை வழியாக முத்தா புதுப்பேட்டையிலுள்ள ஒரு தேநீர், கடை அருகே சென்ற போது, இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர், குணசுந்தரி அணிந்திருந்த, இரண்டு சவரன் தாலி சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பினார். புகாரின்படி, முத்தாபுதுப்பேட்டை காவல் துறையினர் ,விசாரிக்கின்றனர்.