புதுக்கோட்டை : இன்று 22.03.22 புதுக்கோட்டை மாவட்டம் குடிமியான்மலை அருகே உள்ள வண்ணாரப்பட்டி கிராமத்தில் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி நிஷா பார்த்திபன் அவர்களின் உத்தரவின் பேரில் மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு அவர்கள் உத்தரவு படி , ஆலங்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் மற்றும் புதுக்கோட்டை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு உதவி ஆய்வாளர் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் காவல் ஆளிநர்களோடு சட்டவிரோதமாக கள்ள சாராயம் காய்ச்சுபவர்களை தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை.
நடவடிக்கையாக மது வேட்டையில் ஈடுபட்டபோது வண்ணாரப்பட்டி, சீவகம்பட்டி, கவிநாரிப்பட்டி, பகுதியில் ரோந்து செய்தபோது வண்ணாரப்பட்டி அர்ச்சுனன்குளம் அருகில் கண்காணித்தபோது முற்புதர்களில் கள்ளச்சாரயம் காய்ச்சுவதற்கான மூலப்பொருள்கள் கொண்ட வெல்லம், பேரிச்சம்பழம், கடுக்காய்வசம்பு, அழுகிய பழங்கள் போடப்பட்ட சாராய ஊரல்கள் 7 பேரல்களில் மொத்தம் 2300 லிட்டர் சாராய ஊரல்கள் மற்றும் 10 லிட்டர் கள்ளச்சாரயத்தையும் பதுக்கி வைத்திருந்ததை கைப்பற்றப்பட்டது எதிரிகள் மீது வழக்கு பதிவு
செய்யப்பட்டது