சென்னை: மெரினா கடற்கரையில் கல்லூரி மாணவர் மற்றும் அவரது நண்பர்களை மிரட்டி 4 செல்போன்களை பறித்த 2 நபர்களை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆயுதப்படை காவலர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார். Commissioner of Police appreciated and rewarded Armed Reserve Police personnel for apprehending 2 accused who threatened a college student and his friends and snatched 4 mobile phones at Marina Beach. திருவள்ளூர் மாவட்டம், செவ்வாய்பேட்டை, பஜனை கோயில் தெரு, எண்.29 என்ற முகவரியில் வசித்து வரும் கல்லூரி மாணவர் ராகேஷ் (வ/19) என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து 20.03.2022 அன்று மெரினா கடற்கரை, நீச்சல் குளம் அருகில் சுற்றிப் பார்த்து கொண்டிருந்த போது, அங்கு வந்த 2 நபர்கள், மேற்படி ராகேஷ் மற்றும் அவரது நண்பர்களை மிரட்டி அவர்கள் வைத்திருந்த 4 செல்போன்களை பறித்துக்கொண்டு தப்பியுள்ளனர்.
ராகேஷ் உடனே அருகில் பணியிலிருந்த ஆயுதப்படை காவலர்கள் திரு.K.ராஜசேகர், (கா.எண்.49211) திரு.V.சரவணக்குமார் ஆகியோரிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். உடனே மேற்படி காவலர்கள் விரைந்து செயல்பட்டு மெரினா கடற்கரையில் தேடுதல் வேட்டை நடத்தி செல்போன் பறித்துக்கொண்டு தப்பிய 2 நபர்களை மடக்கிப்பிடித்து D-6 அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் ஓப்படைத்தனர்.
D-6 அண்ணா சதுக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணையில் பிடிபட்ட நபர்கள் 1.பிரபாகரன் (வ/27), கண்ணகி நகர், 2.பாலாஜி (வ/24), பிளாட்பார்ம், என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 4 செல்போன்கள் மீட்கப்பட்டது. மேற்படி வழக்கில் சிறப்பாக பணிபுரிந்த காவல் குழுவினரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் இன்று (21.03.2022) நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.