வேலூர்: வேலூர் மாவட்டம் ஆம்பூர் நகரம் முழுவதும் சுமார் 30 இடங்களில் 110 சிசிடிவி கேமராக்கள் 25 லட்சம் மதிப்பிலான கேமராக்களை காவல்துறை சார்பில் குற்றங்களை குறைக்க பொருத்தப்பட்டுள்ளது, இதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார், IPS தொடங்கி வைத்தார்.
இதில் மாவட்ட துணை கண்காணிப்பாளர் சச்சிதானந்தன், நகர காவல் ஆய்வாளர் அரிகிருஷ்ணன், கிராமிய காவல் ஆய்வாளர் கோகுல்ராஜ் உமராபாத், காவல் ஆய்வாளர் பாலசுப்பிரமணி, வேப்பங்குப்பம் காவல் ஆய்வாளர் சரவணன் மற்றும் ஆம்பூர் நகரம் முழுவதும் உள்ள வணிகர்கள் கட்சி பிரமுகர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வேலூர் மாவட்டம் முழுவதும் ஆம்பூர் நகரத்தில் தான் முதல்முதலில் 110 கேமராக்கள் பொருத்தப்பட்டு குற்றங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று மாவட்டம் முழுவதும் உள்ள நகரம் பகுதிகளில் ஒன்றன்பின் ஒன்றாக அனைத்து இடங்களில் பொருத்தப்படும் என்றும் தெரிவித்தார். தற்போது குற்றங்களை குறைக்க சிசிடிவி கேமராக்கள் பேருதவியாக உள்ளது என்றும் பேசினார்.
ஆம்பூர் நகரம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது, மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மாவட்டத் துணை கண்காணிப்பாளர் சச்சிதானந்தன் மற்றும் நகர காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் ஆகியோரை பொது மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்