சென்னை : கோவை சுந்தராபுரம், பகுதியை சேர்ந்த விமல்குமார், யூடியூப் சேனல் மூலம், போரெக்ஸ் டிரேட் எனப்படும் ஆன்லைன் வர்த்தகத்தை தொடங்கினார். அதை நம்பி ஏராளமானவர்கள், முதலீடு செய்து உள்ளனர். ஆனால் விமல்குமார், அவர்களுக்கு பணத்தை திரும்பி கொடுக்காமல், மோசடி செய்து விட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கூறி கடந்த பிப்ரவரி மாதம், முதலீட்டாளர்கள் கோவை ஆட்சியரிடம், புகார் அளித்தனர்.
இதில் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியை சேர்ந்த முதலீட்டாளர், ஒருவர், ரூ.16 லட்சம் வரை இழந்து விட்டதாக கோவை பொருளாதர குற்றப்பிரிவு காவல் துறையினரிடம், புகார் அளித்தார். அதன்பேரில் காவல் துறையினர், விசாரணை நடத்தினர். இதையடுத்து அவர்கள், 2 பேர் மீதும் சட்டப்பிரிவு 420, (மோசடி), 406 (நம்பிக்கை மோசடி), 120 (கூட்டு சதி), பொருளாதார முதலீட்டாளர்கள், பாதுகாப்பு சட்டம் (டான்பிட்), ஆகிய 4 பிரிவுகளின் கீழ் காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இந்த மோசடியில் , யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது, என்பது குறித்து காவல் துறையினர், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.