புதுக்கோட்டை : புதுக்கோட்டையில் ஆன்லைன் மூலம் மோசடியில் ஈடுபட்டவர்களிடம், இருந்து இதுவரை, ரூ.6 லட்சத்து 14 ஆயிரத்தை சைபர் கிரைம் காவல்துறையினர், மீட்டுள்ளனர். புதுக்கோட்டையை சேர்ந்த பிரபாகரன்,(53), என்பவரது மொபைல் போனுக்கு, தேசியமயமாக்கப்பட்ட, வங்கியில் இருந்து அனுப்பியதை, போல் போலியான எஸ்.எம்.எஸ்., வந்துள்ளது. அதை உண்மை என நம்பி, எஸ்.எம்.எஸ்., உள்ள லிங்கை கிளிக் செய்து, தனது வங்கி கணக்கு எண் மற்றும் ரகசிய குறியீடு எண்ணை, உள்ளீடு செய்துள்ளார்.
உடனே, மர்ம நபர்கள், அவரது வங்கி கணக்கில் இருந்து, 1 லட்சத்து 23 ஆயிரத்தை, எடுத்து விட்டனர். பணம் மோசடி செய்தது தொடர்பாக, புதுக்கோட்டை சைபர் கிரைம் காவல்துறையினரிடம், பிரபாகரன் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த, காவல்துறையினர், மர்ம நபரின் வங்கி கணக்கு எண்ணை கண்டுபிடித்து, விசாரித்தனர். அந்த எண்ணில் இருந்து, ஆன்லைன் நிறுவனத்தில் லேப்டாப், மொபைல் போன்கள், உள்ளிட்ட பொருட்கள் ஆர்டர் செய்தது, தெரிய வந்தது. உடனடியாக ஆன்லைன், நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்த காவல்துறையினர், அந்த பணத்தை முடக்கினர். மேலும், 98 ஆயிரம் ரூபாயை மீட்டனர். அந்த பணத்தை, பாதிக்கப்பட்ட பிரபாகரனின், வங்கி கணக்கில் செலுத்தினர். காவல்துறையினர், மர்மநபர்களை கைது செய்தனர்.